Header Ads

test

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை பலியெடுத்த படகு விபத்து.

 திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இன்று காலை இடம்பெற்ற படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். முப்பது வயது தாய், ஆறு வயது மகன், மூன்றரை வயது மகள் ஆகியோர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

அதேவேளை இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த அனர்த்தத்தில் 70 வயது நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

மேலும் படகு விபத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட 19 பேர் கிண்ணியா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் ஆறு வயது குழந்தையொன்றை திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இத்துயர சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments