இலங்கையில் ஆசிரியர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் சரமாரியாக தாக்கிய மாணவி.
ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் சென்ற மாணவர்கள் இருவர் குறித்த ஆசிரியரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக போத்தல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் போத்தல காசிதெனிய பிரதேசத்தில் நேற்று இரவு (21) ஞாயிற்றுகிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் பத்தேகம புனித அந்தோனியார் கல்லூரியில் கடமையாற்றும் 45 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். கடுமையான காயங்கள் ஏற்பட்ட நிலையில் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான ஆசிரியர், சிறுமியின் தாயாருடன் திருமணத்துக்கு அப்பாலான தொடர்பினை பேணிவந்துள்ளதாகவும், இதுகுறித்து ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று வினவியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் குறித்த சிறுமி ஆசிரியரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை போத்தல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment