பால்மா மற்றும் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் வெளிவந்த தகவல்.
இலங்கையில் நிலவி வரும் டொலர் நெருக்கடியின் காரணமாக எரிவாயு மற்றும் பால்மா இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையை மத்திய வங்கி தலையிட்டு சரி செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி வழமை போன்று கிடைக்கும் பட்சத்தில், தற்போது காணப்படுகின்ற நிலை வழமைக்கு திரும்புமென அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய சூழலானது டொலர் பற்றாக்குறையின் காரணமாக ஏற்பட்டதாக நிதியமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் தற்போது போதுமான பால்மா கையிருப்பில் உள்ளதாக பிரதான நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் நாட்டின் பல பிரேதேசங்களில் எரிவாயு மற்றும் பால்மா ஆகியவற்றுக்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment