எரிபொருள் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.
நாட்டில் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை மொத்த பெற்றோலிய களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ் கூறியதாவது,
முத்துராஜவெல களஞ்சியத்தில் தற்போது 40,000 மெட்ரிக் டன் டீசல் ஏற்றப்பட உள்ளன.
அதே சமயம் நாளைய தினம் 36,000 மெட்ரிக் டன் பெற்றோலும் கிடைக்கவுள்ளது. எதிர் வரும் 19 ஆம் திகதி மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் கொண்டுவரப்படவுள்ளது.
எனவே எரிபொருள் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment