Header Ads

test

உலக்கையால் தாக்கி இளைஞர் ஒருவர் மரணம்.

 பத்தேகம - நாகொடை வீதியின் பழைய பஸ் நிறுத்தத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது 26 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

உயிரிழந்த நபர் வீட்டுக்கு சென்று (மன்னா வகை) கத்தியால் உணவக உரிமையாளரை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் அங்கு நின்ற உணவக உரிமையாளரின் மகன் உலக்கை ஒன்றினால் குறித்த இளைஞனை கடுமையாகத் தாக்கியுள்ளதாகவும் அதன்போதே குறித்த இளைஞன் உயிரிழந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தாக்குதல் சம்பவம் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பத்தேகம, கொடகொட பிரதேசத்தை சேர்ந்த உணவக உரிமையாளரின் 25 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பத்தேகம காவல்துறைனர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments