Header Ads

test

பேக்கரி உற்பத்தி உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு.

 பேக்கரி உற்பத்தி உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பானது இன்று (28) வெளியிடப்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (27) முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையினை 17 ரூபாவினால் அதிகரிக்க கோதுமை மா இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், இன்று முதல் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதுடன், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று இரவு கூட்டத்தை கூட்டி  இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இலங்கையில் பல பகுதிகளில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments