வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வவுனியா சிறைச்சாலைக்கு விஜயம்.
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வவுனியா சிறைச்சாலைக்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது வவுனியா சிறைச்சாலையின் நிலைமைகளை அவதானித்த ஆளுநர், சிறைச்சாலையின் தற்போதைய நிலை மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகத்தர்களுடனும் கலந்துரையாடியதுடன், கைதிகளையும் பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த விஜயமானது ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் வவுனியாவிற்கு மேற்கொண்ட முதலாவது விஜயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment