முல்லைத்தீவில் திடீரென குவிக்கப்பட்டுள்ள இராணுவம் - அச்சத்தில் மக்கள்.
மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், முல்லைத்தீவில் முப்படைகளாலும் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவில் மேலதிகமாக வீதித்தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது, சோதனை நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. மாவீரர் துயிலுமில்ல வளாகங்களை சூழவும் இராணுவம் மற்றும் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரச புலனாய்வாளர்கள், இராணுவம், பொலிஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் ஊற்று சந்தி, ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிய வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 15க்கு மேற்பட்ட வீதி தடைகளில் வீதியால் பயணிப்போர் திடீரென சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதோடு பதிவு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
Post a Comment