இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்,இலங்கைக்கு ஆபத்தா - வெளிவந்துள்ள தகவல்.
இந்தோனேஷியா − சுமத்ரா தீவுகளுக்கு அருகில் பாரிய நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை
எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நிலநடுக்கம் குறித்து மேலதிக தகவல் கிடைக்கும் பட்சத்தில் பாதிப்புகள் குறித்து அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment