கிளிநொச்சியில் இன்று அதிகாலை நேர்ந்த துயரச் சம்பவம்.
கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் இன்று அதிகாலை 27வயது குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் முத்தையா கேதீஸ்வரன் என்னும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலம் வீட்டு முற்றத்தில் காணப்படுவதாகவும் இனம் தெரியாத சிலர் நள்ளிரவு 12 மணி தாண்டிய சமயம் , குறித்த குடும்பஸ்தரின் வீட்டிற்கு சென்று இந்த கொடூர சம்பவத்தை நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்தவர் அண்மையில் திருமணமானவர் எனக் கூறப்படுகின்ற நிலையில் அதிகாலை இடம்பெற்ற இச்சமபவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment