Header Ads

test

யாழில் பொலிஸாரின் துணையுடன் அரங்கேறிய அராஜகம்.

 யாழ்.நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் அருகில் உள்ள 150 வருடங்கள் பழமையான மரம் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனைக்கோட்டையில் இருந்து நவாலி ஊடாக வட்டுக்கோட்டை செல்லும் வீதியின் புனரமைப்பு பணிகள் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் குறித்த மரத்தை வெட்டுவதற்கு சென்றிருந்தபோது பிரதேச பொதுமக்கள் சிலர் அதற்கு கடுமையான எதிர்ப்பு காட்டியுள்ளனர்.

இதனையடுத்து இன்றைய தினம் அங்கு தீவிர பொலிஸ் பாதுகாப்புடன் 150 வருடங்கள் பழமையான குறித்த மரம் வெட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் 150 வருடங்கள் பழமையான மரம் தமது  எதிர்ப்பை மீறி வெட்டப்பட்டமை தொடர்பில் பிரதேசவாசிகள் விசனம் வெளிட்யிட்டுள்ளனர்.




No comments