Header Ads

test

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

 நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(04) வரை நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களின் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் எல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments