முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்கள்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கொழும்பு ட்ரயல் எட் பார் நிரந்தர மேல் நீதிமன்றில் இந்த குற்றச்சாட்டுக்கள் இன்றைய தினம் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளன.
Post a Comment