நாட்டிலுள்ள 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.
கடும் மழையுடனான வானிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் (02) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தாழமுக்கப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாக உள்ளது. இதனால், மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வட மாகாணங்களில் இன்று (02) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும்,நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment