Header Ads

test

இலங்கையில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற 700க்கு மேற்பட்டோர் மரணம்.

 இலங்கையில் கோவிட் இறப்புகள் பற்றிய கணக்கெடுப்பில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

செப்டெம்பர் மாதம் வரையில் ஏற்பட்ட மொத்த கோவிட் இறப்புகள் தொடர்பில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சுவாசப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் நடுப்பகுதியில் 11699 மரணங்கள் தொடர்பில் கணக்கெடுக்கப்பட்டன. இதில் 714 பேருக்கு 2 தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு இறந்தவர்களுக்கு பல்வேறு உடல் நல பிரச்சினைகள் காணப்பட்டுள்ளன. தொற்றா நோய் உள்ளவர்கள் தடுப்பூசிகளை பெற்ற போதிலும் உடல் நல பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். இதனாலேயே மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments