Header Ads

test

யாழில் 6 வயதுச் சிறுமியின் மனதை உலுக்கும் மரணம்.

 யாழ்.தாளையடிப் பகுதியில் காச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் செம்பியன்பற்று தாளையடியைச் சேர்ந்த பாஸ்கரலிங்கம் சுலோஜனா என்னும் 6 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 உயிரிழந்த சிறுமி, கடந்த 15ஆம் திகதி காச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், 16ஆம் திகதி மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக 19ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 20 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணையை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.


No comments