Header Ads

test

கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தொற்று.

 கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்கள் உட்பட 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நாளை இடம்பெறவுள்ளது.

அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் மற்றும் கிளிநொச்சி பொதுவைத்தியசாலை ஆகிய இடங்களில் இத் தடுப்பூசி ஏற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.


No comments