சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 19 வயது யுவதி மரணம்.
கடந்த 12ஆம் திகதி வீடொன்றில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 19 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பொலன்னறுவை - வெலிக்கந்த - சந்துன்பிட்டிய கிராமத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பலத்த காயமடைந்து கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வெலிகந்த, சந்துன்பிட்டிய பகுதியை சேர்ந்த ஆயிஷா குமுதுனி (வயது - 19) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெலிக்கந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் எவரும் இல்லாமையால் அயலவர்கள் வருகை தந்து சமையல் அறை முழுவதும் எழுந்த தீயை அணைத்து குறித்த பெண்ணை வெலிக்கந்த பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
கடந்த சில நாள்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிய வருகிறது.
எனினும் புதிதாக வீட்டுக்கு கொண்டு வருகின்ற எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் மிகுந்த அவதானமாக கையாளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Post a Comment