19 வயது இளைஞனுக்கு எமனான புகையிரதம்.
மொரட்டுவை - கொழும்பு ரயில் மார்க்கத்தில் ரயிலுடன் மோதுண்டு 19 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் இரத்தினபுரி – நிவித்திகல பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment