Header Ads

test

18 வயதான யுவதியை கர்ப்பமாக்கிய நபர் கைது.

 யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் 18 வயதான யுவதியொருவர் குழந்தை பிரசவித்து, அதை குழி தோண்டி புதைக்க முற்பட்ட சம்பவத்தில்  பெண்ணை கர்ப்பமாக்கியவர் சிக்கியுள்ளார்.

18 வயதான யுவதியை கர்ப்பவதியாக்கிய, 23 வயதான திருமணமான இளைஞன் ஒருவரே இவ்வாறு கைதாகினார். கடந்த 23ஆம் திகதி மட்டுவில் பகுதியில் குழந்தை பிரசவித்த குறித்த யுவதி, தனது தாயாருடன் குழந்தையை குழி தோண்டி புதைக்க முற்பட்ட போது அயலவர்களிடம் சிக்கினார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தாயையும், குழந்தையையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் யுவதியின் தாயாரை கைது செய்தனர்.

அதன் பின்னர் யுவதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணனமானவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதானவர் திருமணமான 23 வயதானவர் என கூறப்படுகின்றது. இதேவேளை , குழந்தையை பிரசவித்த யுவதிக்கு மேற்கொள்ளப்பட் சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments