16 வயது சிறுவன் வாகனம் செலுத்தியதால் ஒருவர் மரணம்.
கம்பஹா மாவட்டத்தின் வெலிசறை, மஹாபாகேயில் 16 வயது சிறுவன் செலுத்திய சொகுசு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
சிறுவன் செலுத்திச் சென்ற வாகனம் ஏனைய 4 வாகனங்களுடன் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
சொகுசு வாகனமொன்றை சிறுவன் செலுத்தி சென்ற நிலையில் அது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இரு மோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் கார் என்பனவற்றின் மீது மோதியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment