Header Ads

test

தம்புள்ளை சிறுமியின் கொலைச் சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.

 தம்புள்ளையைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் கொலை சம்பவத்தில் நபர் ஒருவர் சாட்சி வழங்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியை நபர் ஒருவர் அழைத்துச் சென்றதை நேரில் பார்த்ததாக குறித்த நபர் சாட்சி வழங்கியுள்ளார்.

நேற்று (11), தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி இந்த சாட்சியங்களை பதிவு செய்தார்.

தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் இன்று (12) சிறுமியின் சடலத்திற்கு பிரேத பரிசோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொலைக்கு காரணமான சந்தேகநபர்களைக் கண்டறிந்து கைது செய்ய மூன்று காவல்துறை குழுக்களை சிறிலங்கா காவல்துறை நியமித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் கணவன் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேநபர்கள் நீண்ட காலமாக வீடுகளை மாற்றிக்கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தம்புள்ளையில் கடந்த சனிக்கிழமை (09) கைவிடப்பட்ட வீட்டின் படுக்கை அறையில், படிக்கச்சென்ற 14 வயது சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 



No comments