பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் கணணி விளையாட்டில் மூழ்கியிருந்த மகனை அடித்துக்கொன்ற தந்தை.
தரம் 11ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் கல்விச் செயற்பாட்டில் கவனம் செலுத்தாது
கணிணி விளையாட்டில் மூழ்கியிருந்த காரணத்தினால் தந்தையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,
காலி சியம்பலஹவத்த பகுதியில் தரம் பதினொன்றில் கல்வி கற்கும் மாணவன் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில், கணணி விளையாட்டில் அதி தீவிரம் காட்டியதை கண்காணித்த தந்தை விரக்குதியுற்றதன் காரணத்தினால், அம் மாணவனை கண்டிக்கும் நோக்கில் செயற்பட்டதன் விளைவாக தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment