எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படைக்குமிடையில் மோதல்.
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட போது, இலங்கை கடற்படையின் படகு மோதி இந்திய மீனவர்களின் படகு மூழ்கியதில் மீனவர் ஒருவர் காணாமற் போயுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப்படகுகளில் மீன்பிடிக்காகச் சென்றுள்ளனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன், சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள், நெடுந்தீவிற்கும் கச்சதீவிற்கும் இடையிலான கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்தவர்களை கைது செய்ய முயன்ற போது ரோந்து கப்பல் மோதியதில் விசைப் படகு கடலில் மூழ்கியுள்ளது.
படகில் இருந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கியதுடன்,சுகந்தன், சேவியர் ஆகிய இருவரை மீட்ட இலங்கை கடற்படையினர், படகு ஓட்டி ராஜ்கிரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இருவரும் காரைநகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
Post a Comment