இளம் பெண்ணின் உயிரைக் குடித்த கப் ரக வாகனம்.
கிரிந்த புஹுல்வெல்ல பகுதியில் கப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மதில் சுவரை உடைத்துக் கொண்டு சென்றமையால் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஐவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திககொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரிய வருவது,
கிரிந்த புஹுல்வெல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான அமராவதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஐந்து மாத கர்ப்பிணியான 24 வயது அவரது மகள் பலத்த காயங்களுடன் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment