யாழில் தோட்ட காணியை துப்பரவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் கிழக்கு பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து சக்திவாய்ந்த வெடிபொருளொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியின் உரிமையாளர் நேற்று மதியம் 1.30 மணியளவில் காணியை சுத்தம் செய்தவேளை குறித்த வெடிபொருள் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வெடிபொருளை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment