ஆயிரக்கணக்கான பறவைகள் கொத்து கொத்தாக இறந்ததால் ஏற்பட்ட அச்சம்.
ஐரோப்பிய நாடான கிரீமியாவில் திடீரென ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்து விழுந்ததால் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சிவாஷ் ஏரிப் பகுதியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு நடத்தி வரும் கிரிமியன் பெடரல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, 7 ஆயிரம் கருப்புக் கழுத்து வாத்துக்கள், 300க்கும் அதிகமான பட்டைத் தலை வாத்துக்கள், 200 முதல் 300 எண்ணிக்கையிலான சாதாரண கடற்புறாக்கள், நூற்றுக்கும் அதிகமான காஸ்பியன் கடற்புறாக்கள் இறந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக பறவைகள் இறப்பிற்கு விஷ உணவு அல்லது நோய்த் தொற்று காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
Post a Comment