இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு செல்ல தயாராகும் இலங்கை ஜனாதிபதி.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இரண்டாவது தடவையாக இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதன்படி அவர் வருகின்ற 20ஆம் திகதி இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் குஷிநகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளது.
இதற்காக இலங்கையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிக்குமார்களும், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் இந்தியா சென்று இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ள நிலையில், ஜனாதிபதியும் அவர்களுடன் செல்லவுள்ளார்.
இதேவேளை குறித்த விமான நிலையத் திறப்பு விழாவில் பங்கேற்றவுடன், அங்கிருந்து முதலாவது விமானப் பயணம் இலங்கைக்கே வரவுள்ளது. இந்த நிலையில் குறித்த விமானத்தில் ஜனாதிபதியும் பிக்குமார்களும் நாடு திரும்பவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Post a Comment