சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளருக்கு விமான நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம்.
சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளரும் சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளருமான வைத்தியர் அனில் ஜாசிங்க (Anil Jasinghe) விமான நிலையத்தில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொரோனா தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்லாததன் காரணமாக அவர் தடுத்து வைக்கப்படடிருந்தாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின் அவர் தனது கையடக்கத் தொலைபேசியின் ஊடாக அட்டையின் நிழற்படத்தை அதிகாரிகளுக்கு காண்பித்த பின்னரே அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டார் என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment