சட்டத்தரணி ஒருவரின் மகனை நடு வீதியில் வைத்து தாக்கிய காவல்துறை உயர் அதிகாரி.
இலங்கை காவல்துறையால் பொது மக்கள் பொது இடங்களில் வைத்து தாக்கப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்கின்றன.
அண்மையில் மட்டக்களப்பில் இளைஞர்கள் இருவரை காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பகிரங்கமான இடத்தில் வைத்து தாக்கிய நிலையில் அவர் பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அவ்வாறான ஒரு சம்பவம் மீண்டும் பதிவாகியுள்ளது.
இதன்படி இரத்தினபுரி கிரியல்ல வீதியில் சிரேஸ்ட காவல்துறை அதிகாரியொருவர் சீருடையில், சட்டத்தரணியொருவரின் மகனை தாக்குவதை காண்பிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கே என்பவரே குறித்த தாக்குதலில் ஈடுபட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறன்து.
சம்பவம் ஒன்று தொடர்பில் காவல்துறையினர் தன்னை கைதுசெய்ய முயன்றதாகவும் தான் மறுத்தவேளை காவல்துறையினர் தன்னை தாக்கியதாகவும் சட்டத்தரணியின் மகன் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சிரேஸ்ட காவல்துறை அதிகாரியும் தன்னை தாக்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment