Header Ads

test

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

 ஹங்வெல்ல பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் இன்று (10) காலை ஹங்வெல்லவில் விடுதி ஒன்றின் அருகே மீட்கப்பட்டுள்ளது.

நுகேகொட பகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் நேற்று (09) மாலை முதல் குறித்த விடுதியில் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments