Header Ads

test

யாழில் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

 ஏழாலை பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை பொலிஸார் வேண்டும்மென்றே தப்பிக்கவிட்டனர் என்ற முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் ஆரம்பித்துள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இருவரையும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

பொலிஸாரின் செயலினால் பாதிக்கப்பட்டவர் ஆணைக்குழுவில் இன்றைய தினம் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

அதனடிப்படையிலேயே இந்த விசாரணையை முன்னெடுப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


No comments