Header Ads

test

முல்லைத்தீவில் இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸார் குவிப்பு.

 முல்லைத்தீவில் பணியாற்றி வருகின்ற ஊடகவியலாளர்களின் அமைப்பாக காணப்படுகின்ற முல்லைத்தீவு ஊடக அமையத்திற்கான புதிய அலுவலகமானது முல்லைத்தீவில் திறந்துவைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வு  நாளை (20) காலை 9 மணிக்கு முல்லைத்தீவு p.w.d. வீதியில் திறந்து வைக்கப்படவுள்ளது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமைய கட்டிடம் நாளையதினம் திறப்பு விழா காண இருக்கின்ற நிலையில் கட்டிடத்தை சூழ இராணுவப் புலனாய்வாளர்கள் சிவில் உடை தரித்த பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், சிவில் உடை தரித்த பொலிஸார் நாளைய நிகழ்வு தொடர்பாகவும், நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களிடம் விசாரித்து சென்றுள்ளனர்.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களும் யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் தலைவர் கலாநிதி எஸ் ரகுராம் அவர்களும் மேலும் பல அதிதிகளும் கலந்து கொள்ள இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.




No comments