Header Ads

test

கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக ஹர்ச குமார நவரத்ன நியமனம்.

 கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரான முன்னாள் சமூக செயற்பாட்டாளர் ஹர்ச குமார நவரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய,ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக பேராசிரியர் ஜனிதா லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் நியமனக் கடிதங்களை ஜனாதிபதி வழங்கியுள்ளதுடன்,அவர்கள் அந்நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

எனினும் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்க்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ஜகத் வெள்ளவத்த இதுவரை அவுஸ்திரேலியா புறப்பட்டுச் செல்லவில்லை.

ஜனாதிபதி இதுவரையில் அவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கவில்லை என்பதே இதற்கு காரணம் என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.


No comments