யாழில் வாடகைக்கு தங்கியிருந்த நபர் சடலமாக மீட்பு.
யாழ்ப்பாணம் அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாசா கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் காத்தான்குடி அமானுல்லா வீதியைச் சேர்ந்த ஆதாம்பாவா முகம்மது றவுஸ் (வயது- 46) என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் இன்று காலை அறையிலிருந்து வெளியில் வராத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment