புகையிரத கடவையில் இடம்பெற்ற கோர விபத்து - சம்பவ இடத்தில் ஒருவர் பலி.
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காரொன்று விபத்துக்குள்ளானதில் பொலிஸ் அதிகாரியொருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார். இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் விபத்தில் , காரின் சாரதியும் பொலிஸ் உத்தியோகத்தருமான மற்றொருவர் படுகாயங்களுடன் கந்தளாய் வைத்திய சாலையில் அதிதீவிர கிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவத்தில் மாத்தளை பகுதியைச் சேர்ந்த டி.எல் சிறிசேன 55 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையிலிருந்து கந்தளாய்க்குச் சென்ற கார் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட போதே விபத்துக்குள்ளானதாகவும் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கத்தினாலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
Post a Comment