பொதுமக்களின் பார்வைக்கு விடவுள்ள கொழும்பு துறைமுக நகரம்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் பொது மக்களின் பார்வைக்காக கொழும்பு துறைமுக நகரத்தை திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு துறைமுக நகரம் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி, உலக பொருளாதாரத்தில் போட்டியிடும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
கடலை நிரப்பி செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த துறைமுக நகரம் சுமார் 269 ஹெக்டேயர் நிலப்பரப்பை கொண்ட பிரதேசமாகும்.
குறித்த துறைமுக நகரத்தை சீனா ஹாபா இஞ்சினியரிங் கம்பனி உருவாக்கியுள்ளது. மேலும் இந்த துறைமுகத்தில் கவர்ச்சிகரமான வீடுகள் மற்றும் வர்த்தக மையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
கொழும்பு துறைமுக நகரின் 99 வீதமான முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக துறைமுக நகர இணையத்தளம் தெரிவித்துள்ளது.
Post a Comment