Header Ads

test

யாழில் பட்டப்பகலில் வீடொன்றில் கொள்ளயடித்த இளைஞனுக்கு நேர்ந்த சம்பவம்.

 கோப்பாயில் நேற்றுப் பட்டப்பகலில் வீடு புகுந்து 10 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய இளைஞன் ஒருவர் இன்று மாலை யாழ்ப்பாணம் நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இணுவிலைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபரிடமிருந்து  திருடப்பட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கோப்பாய் காவல்துறை பிரிவில் நேற்று நண்பகல் வீடொன்றில் 10 தங்கப் பவுண் நகைகள் திருட்டுப்போனதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. வீட்டிலிருந்தவர் குளியலறையில் இருந்தவேளை குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ்(Nicole Francis) தலைமையிலான மாவட்டக் குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இன்று மாலை திருட்டு நகைகளை விற்பனை செய்யும் நோக்குடன் யாழ்ப்பாணம் நகரில் நடமாடிய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் கைப்பற்றப்பட்ட நகைகள் நேற்றைய திருட்டுடன் தொடர்புடையவை என முறைப்பாட்டின் அடிப்படையில் கண்டறியப்பட்டன.


No comments