வவுனியாவில் இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் பலர் வைத்தியசாலையில் அனுமதி.
வவுனியாவில் இராணுவ பேருந்து விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதவாச்சி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த இராணுவ பேருந்து பூனாவைக்கு அண்மித்த பகுதியில் முன்னால் சென்றுகொண்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது
Post a Comment