நாட்டில் தொடரும் கொவிட் மரணங்கள்.
இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 35 பேர் நேற்றைய தினம் (09) உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,331 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நாட்டில் இதுவரை 525,663 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களில் 480,097 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment