Header Ads

test

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் பொது மக்கள் காணி இராணுவத்தால் விடுவிப்பு.

   முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், படையினர் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள், நாளை மறுதினம் (28) விடுவிக்கப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரால் விடுவிக்கப்படும் குறித்த காணிகள், அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு, பின்னர் அது உரிமையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்து மக்கள் புதுக்குடியிருப்பில் மீள குடியமர்ந்த போது, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள சுமார் 19 ஏக்கர் காணிகள், இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கடந்த 2017ஆம் ஆண்டு மக்கள் போராட்டம் மேற்கொண்டதன் விளைவாக ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டன.

எனினும் குறித்த காணியில், இராணுவத்தினரின் 682ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ள நிலையில்,குறித்த முகாமை கைவேலிப் பகுதிக்கு மாற்றிவிட்டு, மிகுதி காணிகள் அனைத்தும் ஆறு மாத காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும், தற்போது 7 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments