பளையில் திடீர் என தோன்றிய குழியால் ஏற்பட்ட பரபரப்பு - சம்பவ இடத்திற்கு விரைந்த பளை பொலிஸ்.
நபர்கள் சிலரால் புதையல் தோண்டப்படுவதாக பளை காவல்துறையினருக்கு கிடக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் கிளிநொச்சி - பளை காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட கச்சார்வெளி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் புதையல் தோண்டப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.
குறித்த இடத்தில் தோண்டப்பட்ட குழி ஒன்றும் காணப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment