Header Ads

test

நிதி அமைச்சரின் நரித் தனத்தை அம்பலப்படுத்திய விமல் வீரவன்ச.

 கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு கையளிப்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் பொதுக்கூட்டத்தில் நேற்று (29) வெள்ளிக்கிழமை பிற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவால் (Basil Rajapaksa) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படாமை தொடர்பான சதித்திட்டம் தொடர்பில் இதன்போது அமைச்சர் விரிவாக விளக்கமளித்தார்.

இதேவேளை அரசாங்கத்தின் அமைச்சரவையில்,  திருட்டுத் தனமாகவும், பொய்யாகவும் அமைச்சரவைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் அமைச்சர்கள் குழு சார்பில் எந்த துரோகமும் செய்ய முடியாது எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 


No comments