நாடு திரும்பிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ
நியூயோர்க்கில் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சற்று நேரத்திற்கு முன்னர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த செப்டெம்பர் 18 அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார்.
ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும், கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment