கல்வி கற்கச் சென்ற சிறுமி சடலமாக மீட்பு.
தம்புள்ளை - கலோகஹஹெல பகுதியில் 14 வயது சிறுமியின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த 6ஆம் திகதி அருகில் உள்ள வீடொன்றிற்கு கற்றல் செயற்பாடுகளுக்காகச் சென்று நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் தாய் தம்புள்ளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர், சிறுமி கற்றல் செயற்பாடுகளுக்காகச் சென்ற வீட்டை சோதனையிட்ட போது சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த வீட்டிலிருந்த தம்பதியினர் தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்ற தம்பதியினரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
Post a Comment