Header Ads

test

குருநாகலில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

 குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குருநாகல், கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இப்பன்கொடுவ பிரதேசத்தில் நேற்று (06) இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே மரணமடைந்துள்ளார். மேலும் பவுசரின் சாரதி படுகாயமடைந்து சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

இப்பன்கொடுவ பிரதேசத்தில் வீதியில் சென்றுகொண்டிருந்த பவுசர், லொறி ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். விபத்தில் பவுசரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.




No comments