Header Ads

test

கனடாவிடம் இலங்கை முன்வைத்த முக்கிய கோரிக்கை.

 ஓன்டாரியோ சட்டசபையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை மீண்டும் கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினனை சந்தித்த வேளை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒன்டாரியோ சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனி உறுப்பினர் பொதுச் சட்டமூலம் குறித்து மீண்டும் கரிசனை வெளியிட்டுள்ளார்.

இந்தத் தீர்மானத்திற்கு எதிராக ஒன்டாரியோ உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தான் சுட்டிக்காட்டியதை போல தசாப்தகாலமோதலின் பின்னர் சமூகத்தின் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை முயல்வதாக தெரிவித்துள்ளார்


No comments