Header Ads

test

மாகாண பயணக்கட்டுப்பாடு தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்.

 கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க தேவையான சுகாதார வழிகாட்டுதல்களை செயற்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மாகாண பயணக் கட்டுப்பாடுகளை மீறி விடுமுறை காலப்பகுதியில் சிலர் வேறு பிரதேசங்களுக்கு சென்றுள்ளதாக பொது மக்களின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

 மக்கள் இந்த நேரத்தில் முடிந்தவரை பொது இடங்கள் கூடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்க இந்த ஒரு மாத காலம் மிகவும் முக்கியமானது.

மக்கள் இதற்கு ஆதரவளித்தால், அடுத்த மாதத்தில் கொரோனா நிலைமையை எங்களால் இதைவிட குறைக்க முடியும். ஆனால் மக்களின் நடத்தையில்தான் கொரோனாவை அதிகரிப்பதா,அல்லது குறைப்பதா, என்பது தங்கியிருப்பதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார்.



No comments