Header Ads

test

இலங்கை வானில் தோன்றிய மர்மப்பொருள் - அச்சத்தில் மக்கள்.

 இலங்கையின் சில பகுதிகளில் வானிலிருந்து மர்ம பொருள் வந்துள்ளதாக நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

தெஹிஅத்தகண்டிய, கிராதுருகோட்டை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் சிலந்தி கூடுகள் போன்ற பொருள் ஒன்று நேற்று காலை வானில் பறந்து வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில பகுதிகள் தரையில் விழுந்துள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் பிரதேச மக்கள் கருத்து வெளியிடும் போது, தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நூல் போன்ற ஒன்று வானில் இருந்து விழுந்தது.

பிரதேசம் முழுவதும் வெள்ளையாக படர்ந்து இந்த நூல் காணப்பட்டது. வெயில் பட்டவுடன் அவை மாயமாகி விடுகின்றது. வானம் முழுவதும் அவை படர்ந்து கொண்டிருந்ததனை பார்க்க முடிந்தது.

சிறிது நேரத்தில் விமானம் ஒன்று அந்த பகுதிகளில் பறந்ததனை அவதானித்தோம். அதில் புகை போன்று வெளியேறியது எனினும் சற்று நேரத்தில் விமானம் மறைந்து விட்டது.

இதனால் சந்தேகம் ஏற்பட்டு பொலிஸார் மற்றும் விமானப்படையினருக்கு தகவல் வழங்க நடவடிக்கை மேற்கொண்டோம் இருந்தும் குறித்த மர்மப்பொருளை கமராவில் பதிவு செய்ய முடியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 


No comments