Header Ads

test

விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் யார் கையில் - வெளியானது தகவல்.

 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சொத்துகள் எதுவும் தன்னிடம் இல்லை எனவும் இறுதிப்போரின்போது தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்ததாகவும் விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் பிரதானியாக கருதப்பட்ட கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள செஞ்சோலையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், இறுதி யுத்தத்துக்கு பிறகு புலிகளின் சொத்துகள் உங்கள் வசமானது என தகவல்கள் வெளியாகின. அந்த சொத்துகளுக்கு என்ன நடந்தது என ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கே.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இறுதிப்போரின்போது நான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்தேன். எனக்கு எந்தவொரு சொத்தும் வழங்கப்படவில்லை. நாளாந்த செலவுக்கே பணம் வழங்கப்பட்டது.

அவ்வாறு சொத்துகள் இருந்திருந்தால் எமது மக்களை அழிவில் இருந்து மீட்டிருக்கலாம். அவர்கள் (புலிகள்) எவ்வாறான சொத்துக்களை விட்டுச்சென்றனர் என்பது எவருக்கும் தெரியாது. எனவே, இப்பிரச்சினைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.


No comments